பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ- மாணவியர் எழுதினர்.
அதில் மாணர்வர்கள் 3,90,753 பேர். மணவியர் 4,52,311 பேர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 42,963 பேர் எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 5,56,498 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வில் எந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவியர் மாநில முதலிடம் பிடிப்பார்கள் என்று பரபரப்பு நேற்று காலை முதலே பெற்றோரிடம் தொற்றிக் கொண்டது.
தேர்வர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in