இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் Rs. 740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையில் சீனா வழங்கும் கடனுதவியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலில், அந்நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வாயிலாக உற்பத்தி செய்வதற்கு இலங்கை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடையும் நோக்கில், சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, இலங்கை அரசுக்கு சுமார் ‘ 740 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.

சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பை இந்தியா முன்னின்று கடந்த 2018-ஆம் ஆண்டு உருவாக்கியது. அதில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளது. மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது.