சர்ச்சைக்குரிய ரஷ்ய குழாய் எரிவாயு திட்டத்துக்கு அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத் திட்ட ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இணைந்து ஜெர்மனி மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக ’நாட் ஸ்டிரீம் 2ஏஜி என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், இது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் தீங்கு விளைவிக்கும் திட்டம் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த எதிர்ப்புக்கிடையே, குழாய் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில், இந்த குழாய் எரிவாயு திட்டத்துக்கு எதிரான தடைகளை நீக்க ஜோ பைடன் நிர்வாகம் முன்வந்திருப்பது தெரியவந்துள்ளது.