2017, மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை காண நமது சுராவின் வலைபக்கத்திற்கு வருகை தாருங்கள்.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள். எனவே இத்தேர்வை மொத்தம் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும்.