பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முதல் முறையாக முடிவுகள் குறித்த தேதி தேர்வுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8 முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 2 முதல் 31-ந்தேதிவரை நடக்கின்றன. தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய பிறகுதான் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தேர்வு நடப்பதற்கு முன்பாகவே வெளியிடுகிறோம். அதன்படி, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 12-ந்தேதியன்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும். காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
SURA’s Wishing All The Best for Tamilnadu 10th & 12th Students ! ! !
[highlight bgcolor=”#dd9933″ txtcolor=”#000000″]CLICK HERE [/highlight] – Tamil Nadu Samacheer Guides 2017