tnpsc group 1 main exam paper 2

டிஎன்பிஎஸ்சி‬ குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது.ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார்
ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்
அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர் (13 காலி பணியிடம்) என 60க்கும்மேற்பட்ட காலி பணியிடங்கள், குரூப் 2வில் (நேர்முக தேர்வு பதவி) 1000காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி
தொடங்கப்படும். இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள்
நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது.
இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப்
4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ.
தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும்
உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி
தூரிதப்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி.
இணையதளத்தில் தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில்,
அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது.
தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவரின்மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை
பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.

tnpsc group 1 main exam paper 2
tnpsc group 1 main exam paper 1

Reference Book for TNPSC Group 1 Exam Books : http://goo.gl/rGVKzb

By SEO