நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டு அதிபர் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

ஆட்சி அமைக்க பிரதமர் சர்மா ஓலியும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தாபாவும் ஒரே நேரத்தில் உரிமை கோரிய நிலையில் அதிபர் இந்த முடிவை எடுத்தார். பிரதமர் சர்மா ஓலி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசன சட்டப் பிரிவு 76(7)-இன்படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், புதிதாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அதிபர் அறிவித்தார்.

பின்னணி: ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓலிக்கு அளித்து வந்த ஆதரவை புஷ்ப கமல் திரும்பப் பெற்றார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஓலி அரசு தோல்வி அடைந்தது. பிரதமர் பதவியையும் சர்மா ஓலி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் மீண்டும் வாய்பளித்திருந்தார். ஆனால், எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 121 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, பிரதமர் சர்மா ஓலியும், எதிர்கட்சியினரும் தங்களுக்குதான் பெரும்பான்மை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களைக் கொடுத்ததால், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் வித்யா தேவி உத்தரவிட்டார்.
2-ஆவது முறை: முன்னதாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைக்கவும், புதிதாக தேர்தல் நடத்தவும் அதிபர் உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிபரின் முடிவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதமரின் பரிந்துரையை ஏற்று 2-முறையாக நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் உத்தவிட்டுள்ளார்.

  1. நேபாள நாடாளுமன்றம் கலைப்பு