அரசு முறைப் பயணமாக குவைத் வந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா காலித் அல்-ஹமாத் அல்-சபாவை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா-குவைத் இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கும் குவைத் பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா-குவைத் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 60-ஆவது ஆண்டையொட்டி இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

குவைத் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியாவும், இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடாக குவைத்தும் விளங்குகின்றன.