4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகள் மீதான வருடாந்திர அறிக்கையின்படி, 2016, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி பல்வேறு துறைகளில் 4,12,752 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 36,33,935 ஆகும். மேலும் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது