இந்த ஆண்டு, சாகித்ய அகாடமியின், தமிழ் மொழிக்கான விருது, எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி நிறுவனம், இந்தியாவில் வெளியாகும், 24 மொழிகளின் படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இலக்கிய உலகில் மிகவும் கவுரவமானதாக, இந்த விருது மதிக்கப்படுகிறது.கரிசல் பூமியில் வாழும், நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியல் சார்ந்த, ‘சஞ்சாரம்’ நாவலுக்காக, இந்த ஆண்டு, தமிழ் படைப்புக்கான விருது, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு எனும் கிராமத்தில் பிறந்தவர். 35 ஆண்டுகளாக, சிறுகதை, இலக்கியம், பயணம் மற்றும் பொதுக் கட்டுரை நுால்களை எழுதி வருகிறார். திரைப்படங்களுக்கும் வசனமும், பதிப்பகமும் நடத்தி வருகிறார். இவரின் நுால்கள், ஆங்கிலம், டச்சு உள்ளிட்ட அயல் மொழிகளிலும், ஹிந்தி, வங்காளம் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.