குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்டபணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கியபணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவிஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்குகடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வை 2½ லட்சம் பேர்எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டுஜூலை மாதம் நடந்தது.

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மைதேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள்.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில்உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது.முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களைஅரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

Click Here to Result