இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 06.11.2016 அன்று தொகுதி-IV-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை-I, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான 5451 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் பங்குபெற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 நபர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Communal category wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category Rank) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை (Register Number) உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் 20.03.2017 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position) மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

 

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the 5451 vacancies in the posts of Junior Assistant, Bill Collector Grade-I, Field Surveyor, Draftsman, Typist and Steno Typist Grade-III included in Group-IV Services was held on 06.11.2016 conducted by the Tamil Nadu Public Service Commission. Out of 12,51,291 candidates appeared in the written examination, the Marks and Rank Position of the 11,50,392 Candidates is hosted in the Commission’s Website “www.tnpsc.gov.in“. The Overall Rank, Communal category Rank and Special Category Rank of the candidates are also hosted. The candidates may get their Marks and Rank by entering their Register Number. The Rank List has been arrived based on the claims relating to age, educational qualification, technical qualification, Communal category, special category status etc. made by the candidates in their online applications. If any of their claims are found to be false or incorrect at the time of Certificate Verification, their candidature will be cancelled and they will not be permitted to attend the counselling. The Candidates will be called for Certificate Verification from 20.03.2017 onwards. Later, they will be called for Counselling according to their ranking position, vacancy position and rule of reservations of appointment. The details regarding the date of Counselling will be hosted in the Commission’s website (www.tnpsc.gov.in) soon. The marks of the candidates who have not acquired the qualifying marks is also hosted in the Commission’s website. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS .

SURA’S Wishing TNPSC Group 4 Exam Winners  2016 ! ! !