தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் போன்ற 74 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, வரும் நவம்பர் 8ம் தேதி அன்று முற்பகல் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.
இப்பணியிடங்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து இன்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் http://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவெண்ணை, இணையதளத்தில் உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் [email protected] என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in
Reference Study Material Book : TNPSC Group 1 Exam Study Material Books