தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அதிகபட்சம் தலா ரூ.3 ஆயிரம் கிடைக்கும் | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனசாக ரூ.3 ஆயிரத்தை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. போனஸ் உச்சவரம்பை ரூ.3 ஆயிரமாக கொண்டு இந்த தொகை வழங்கப்படுகிறது. 2016-17-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களில் பணியாற்றிய முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவுத் திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் (அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பஞ்சாயத்து செயலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் வரும் தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு தற்காலிக போனசாக ஆயிரம் ரூபாய் அனு மதிக்கப்படுகிறது. அதுபோல, மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் முன்னாள் கிராம பணியமைப்பு ஊழியர்கள் (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) உள்பட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள், தற்காலிக ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு பொங்கல் போனசாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 6 லட்சத்து 86 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு போனஸ் தொகை வழங்குவதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.206 கோடி செலவாகிறது | G.O.(Ms) No. 7 Dt: January 08, 2018 | Pongal Festival, 2018 – Grant of Pongal Prize to ‘C’ and ‘D’ Group Pensioners / All Family Pensioners – Orders – Issued. DOWNLOAD | G.O.Ms.No.6 Dt: January 06, 2018 | BONUS – Payment of Ad hoc Bonus and Special Ad hoc Bonus for the Accounting Year 2016–17 – Sanction – Orders – Issued.DOWNLOAD