பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், 23ல் துவங்குகிறது. மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி அடையாதவர்கள்,பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜூன், 23ல் இந்த தேர்வு துவங்குகிறது.
- ஜூன், 23, 24ல் மொழி பாடத் தேர்வு,
- 26ல் ரமலான் பண்டிகை விடுமுறை,
- 27, 28ல் ஆங்கிலம்;
- 29ல், வேதியியல், கணக்கு பதிவியல்,
- 30ல், வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
- ஜூலை 1ல், கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயபெடிக்ஸ்;
- 3ம் தேதி, தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, முன்னேறிய தமிழ்,
- ஜூலை 4ல், அனைத்து தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது) மற்றும் புள்ளியியல்; 5ம் தேதி, உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
- ஜூலை 6ல் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
காலை, 10:00 மணி முதல், 1:15 மணி வரை, தேர்வுகள் நடக்கும்.
தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மே, 29 முதல் ஜூன், 1 வரை, பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக, 35 ரூபாயும், ஆன்லைன் பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.