கிழக்கு காங்கோவில் கோமா என்ற நகரையொட்டி உள்ள நியிராகோங்கோ எரிமலை சமீபத்தில் வெடிக்கத் தொடங்கியது. அதன் நெருப்புக் குழம்புகளும், புகையும் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் பரவியதில் 15 பேர் உயிரிழந்தனர். எரிமலை பகுதியில் உள்ள கோமா நகரைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறினர். இதில்
170-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காணவில்லை என யுனிசெஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


2002-ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து நெருப்புக் குழம்புகளை வெளியேற்றியதில் கோமா நகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.