தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டுதேர்வு துவங்கும்,” என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்அறிவித்துள்ளார்.

 

டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறைவிடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வுஅட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள்வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வுநடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர்விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 -தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 – தமிழ் அல்லதுமொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும்இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்; 18ல் விருப்ப பாடம்; 19ல்,அறிவியல்; டிச., 22ல், சமூக அறிவியல்பிளஸ் 1 வகுப்புடிச., 10 -மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்தியவரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல்அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 – கணிதம், விலங்கியல்,வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல்,டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை,வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி; 17ல்,இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்டிச., 19 -உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும்புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்,எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலகமேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல்தொழில்நுட்பம்டிச., 22 – வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல்பிளஸ், 2 வகுப்புடிச., 10 – மொழி பாடம்; 11ல்,ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினிஅறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி,அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும்புள்ளியியல்டிச., 14 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும்ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல்,நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்விடிச., 17 – இயற்பியல்,பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்,சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ்,ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 19 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலகமேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்; டிச., 22 – வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்.இவ்வாறுதேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும். ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்.