2018 டிசம்பர் 02
- இந்திய – அமெரிக்க விமானப்படைகள் பங்கேற்கும் EX-COPE இந்தியா – 2018 எனும் பயிற்சி ஒத்திகை 2018 டிசம்பர் 03 அன்று மேற்குவங்கத்தில் துவங்கியது.
- 2019 ஜனவரி 26 அன்று கொண்டாடப்படவுள்ள 70 ஆவது குடியரசு தினவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில்ராம போசா கலந்து கொள்ளவுள்ளார்.
- 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 17 ஆவது ஜி – 20 மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. புதுடெல்லியில் இந்த மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2018 டிசம்பர் 01 அன்று, இந்தியாவின் 23 ஆவதுதலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றுக் கொண்டார்.
- பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மஞ்சள் நிறப்போராட்டம் நடைபெறுகிறது.
- 2018 நவம்பர் 30 அன்று, அமெரிக்காவின் 41 ஆவதுஅதிபரான ஜார்ஜ் டபிள்யு புஷ்(சீனியர்) இயற்கை எய்தினார்.
- WBA உலககுத்துச்சண்டை ஹெவிவெய்ட் சாம்பியன்ஷிப் பட்டம் – 2018 ஐ நடப்புச் சாம்பியனான அமெரிக்காவின் டியோன் டேவைல்டர் தக்கவைத்துக்கொண்டார்.