04 டிசம்பர் 2018

  • இந்தியக் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்குடன் 2019 ஜனவரி முதல் மார்ச் வரை ’’ TROPEX’’ எனும் மாபெரும் தொடர் பயிற்சி ஒத்திகையினை மேற்கொள்ளவுள்ளது.  இதில் இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய இராணுவம், விமானப்படை ஆகியவையும் கலந்து கொள்ளவுள்ளன.
  • பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்கிலிருந்து(OPEC) 2019 ஜனவரி முதல் விலகவுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.
  • 2018 டிசம்பர் 3 அன்று, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day of Person with Disabilities) கடைபிடிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் மையக்கருத்து – மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுதல் என்பதாகும்.
  • பெரம்பூர் ICF-னால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட இரயில்-18 ஆனது, 2018 டிசம்பர் 02 அன்று கோட்டா – சவாய் – மாதோப்பூர் வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணித்து இந்தியாவின் அதிவேகமான இரயில் எனும் சாதனையைப் படைத்தது.
  • சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையிலான திட்டங்களில் ‘14 லட்சம் கோடிகளை முதலீடு செய்ய உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தமுதலீடு 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.