பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. வருகிற (நவம்பர்) 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னை தரமணியில் என்ஜினீயரிங் பாடங்களில் தேர்வானவர்களுக்கு நடத்த இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்ஜினீயரிங் அல்லாத பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.