குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 11,280 இடங்களுக்கு நடந்த குரூப்-4 தேர்வில் 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பணிகளில் காலியாக இருந்த 11,280 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 17,53,154 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in மற்றும் http://results.tnpsc.gov.in இணையதளங்களில் கடந்த 30-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 6,28,443 ஆண்கள், 7,97,532 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,26,010 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் 2,771 முன்னாள் ராணுவத்தினர், 4,975 கணவரை இழந்தவர்கள், 17,411 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். புதிய முறையில் நடத்தப்பட்ட தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்சினையும் எழவில்லை. குரூப்-4 தேர்வு மற்றும் விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு சுமார் ரூ.12 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த இந்த குரூப்-4 தேர்வை இவ்வளவு பேர் எழுதியது போல், வேறு எந்த மாநிலத்திலும் எழுதியதில்லை. ஆசிரியர்கள், அதிகாரிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1.25 லட்சம் பேர் தேர்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தகுதிப் பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது. சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவது ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடையும். முதல்கட்டமாக 33 ஆயிரம் பேர் தங்களுடைய சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்தெந்த விண்ணப்பதாரர் எந்தெந்த இ-சேவை மையத்தில் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக வும் தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் நாங்களே சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பரிசீலனை செய்வோம். ஒரு இடத்துக்கு 3 பேர் வீதம் சான்றிதழ் பரிசீலனைக்கு தேர்வு செய்திருக்கிறோம். அக்டோ பர் மாதம் இறுதி வாரத்தில் கலந் தாய்வு தொடங்கும். 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் முறை கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விசா ரணை நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு கள் இன்னும் மூன்று மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு முறைகேடு களை தடுக்க பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வு முறையில் வெளிப் படைத்தன்மை பின்பற்றப்படு கிறது. தேர்வின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்படு கிறது. அறிவிக்கப்பட்ட தேர்வு களை நடத்துவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அறிவிப்புகள் வெளி யாகும். ஆக. 15-க்குள் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.