ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப் பதாரர்கள் தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்கள் தேர்வறைக்கு செல்லும்போது ஹால்டிக் கெட்டை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 6 லட்சம் பேர் விண்ணப்பம் தகுதித்தேர்வில் தாள்-1 இடைநிலை ஆசிரியர்களுக் கான தேர்வு. இத்தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2-க்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (150-க்கு 90) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி போன்றோர்) எனில் 55 சதவீத மதிப்பெண் (150-க்கு 82) பெற வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here to Download