TN Police Constable hall ticket 2022: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), போலீஸ் கான்ஸ்டபிள், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் பணிக்கான அனுமதி அட்டையை (TN Police) வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ TNUSRB இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நவம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12:40 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்…

  • விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், Gr.II போலீஸ் கான்ஸ்டபிள்கள், Gr.II ஜெயில் வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2022 பொது ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள “Hall ticket for written examination” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், வேட்பாளர்கள் தங்கள் உள்நுழைவு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
  • உள்நுழைந்த பிறகு, அனுமதி அட்டை திரையில் காட்டப்படும்.
  • அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை விண்ணப்பதாரர்கள் படிக்க வேண்டும்.
  • எதிர்கால குறிப்புக்காக அதை பிரின்டவுட் எடுக்க வேண்டும்.

இல்லையெனில், விண்ணப்பதாரர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அனுமதி அட்டையை பதிவிறக்குவதற்கான நேரடி ஆன்லைன் இணைப்பை பெறலாம்.

TN போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்துத் தேர்வு 2022 நவம்பர் 27 அன்று நடைபெறும். தேர்வு நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.40 மணி வரை இரண்டு பாடங்களைக் கொண்டிருக்கும்: தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 80 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 கேள்விகளும் உள்ளன. மொத்தம், 160 நிமிடங்களுக்கு 150 கேள்விகள் ( தேர்வு 2 மணிநேரம் 40 நிமிடங்கள் நடைபெறும்) இருக்கும். தமிழ் தகுதித் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வின் கேள்விகள் ஒற்றைக் கேள்வி புத்தகத்தில் இருக்கும்.

காவல்துறையில் 2180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது.

தேர்வு செயல்முறை

TNUSRB தேர்வை மூன்று கட்டங்களாக நடத்தும்: எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்ப்ராட்ஸ்/கேம்ஸ் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வரையப்படுகிறது.