சென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.

10ம் தேதி (திங்கட்கிழமை) – தமிழ் முதல் தாள்

11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – தமிழ் இரண்டாம் தாள்

13ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கிலம் முதல் தாள்.

14ம் தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் இரண்டாம் தாள்

17ம் தேதி (திங்கட்கிழமை) – கணிதம்

18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – விருப்ப பாடம்

19ம் தேதி (புதன்கிழமை) – அறிவியல் 22ம் தேதி (சனிக்கிழமை) – சமூக அறிவியல்