‘தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.