‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் | கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு மத்திய தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க கடைசி நாள் மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் மார்ச் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்ஐஆர் அறிவித்துள்ளது. நெட் தேர்வுக் கான பாடத்திட்டமும், மாதிரி வினாத்தாளும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.