13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் | மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மதுரையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்.13, 14 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்தல், பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு விரைவாக பணப்பலன் வழங்குதல், பள்ளி வளாகங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தல், பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தயாரித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.