மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்’டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது
 *மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, ‘சிடெட்’ என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம், வரும், 9ம் தேதி நடத்துகிறது
*நாடு முழுவதும், 92 நகரங்களில், 2,296 மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது
*இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு
*முதல் தாள் தேர்வு, டிச., 9 காலை, 9:30 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணிக்கு முடியும்; இரண்டாம் தாள் தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 மணிக்கு முடியும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், http://www.ctet.nic.in என்ற இணையதளத்தில், நாளை வெளியிடப்படுகிறது
 *இந்த, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வரும், 30ம் தேதிக்குள், சி.பி.எஸ்.இ.,யை உரிய ஆவணங்களுடன் அணுகி, அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது