TRB – POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB – அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 – 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 16.09.2017 அன்று நடத்தப்பட்டு 1,33,567 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் போட்டி எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாட்களுக்கு, உரிய தற்காலிக விடைக்குறிப்புகள் ((Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே தேர்வுக்கான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 12.10.2017 மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.