ரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் ஆகிய பதவிகளில் 139 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு மார்ச் 3-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு இதற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 1-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, முதல்நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவோர். இந்த எண்ணிக்கை “ஒரு காலியிடத்துக்கு 50 பேர்” என்ற விகிதாச்சாரத்தில் அமைந்திருக்கும்.