டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5ஏ பணியிடங்களில் டிரான்ஸ்ஃபர் முறைகளில் பனியாற்ற மொத்தம் 54 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சியில் அஸிஸ்டெண்ட் , ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் மினிஸ்ட்டரியில் பணியாற்றவோ அல்லது தமிழ்நாடு நீதிப்பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 முதல் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 26 ஆம் நாள் விண்ணப்பிக்க இறுதி நாளாகும் . தேர்வு நாள் நவம்பர் 25ஆம் தேதி ஆகும். செப்டம்பர் 28 வரை விண்ணப்ப கட்டணங்கள் செலுத்தலாம். தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும்.

டிஎன்பிஎஸ்சி மூலமாக இக்காலிப்பணியிடங்கள் நிறைவேற்றப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சியின் குரூப் 5ஏ பணிக்கு விண்ணப்பிக்க் இளங்கலை பட்டம் முடிந்திருந்தால் போதுமானது ஆகும் . அல்லது குறிப்பிட்ட பணியில் வேலை செய்த 3 வருடங்கள் முடித்திருக்க வேண்டும் . குரூப் 5ஏ பணிக்கான தேர்வுகள் சென்னை , மதுரை , கோவை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ பிரிவிற்கான தேர்வை நடத்தும் . தேர்வுத்தாள் கொள்குறி வினாக்கள் கொண்டது.  தேர்வுக்கு மொழிப்பாடமான தமிழ் அல்லது ஆங்கிலத்திலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு எழுதுவோர் விருப்பபடி மொழியை தேர்வு செய்ய வேண்டும் .

 

பொது அறிவு பாடத்தில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் 25 கேள்விகள் கணிதம் திறனாய்வு பாடத்தில் கேள்விகள் கேட்க்கப்பட்டிருக்கும் . குருப் 5ஏ பதவிகளுக்கான அறிவிப்பு http://www.tnpsc.gov.in/latest-notification.html  அதிகாரபூர்வ இணைய தளத்தில் காணலாம் . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . தேவையான தகவல்களை இவ்விணையத்திலிருந்து பெறலாம்