கேந்திரிய வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை கே.வி.எஸ். இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD