உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு இது தொடர்பான கொள்கையை உத்தர பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பொருளாதாரரீதியான முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக உள்ளது.
எனவே 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகை திட்டங்கள் கிடையாது. மேலும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது; ஏற்கனவே அரசுப் பணியில் இருந்தால் பதவி உயர்வு கிடையாது. 4 பேருக்து மட்டுமே ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அந்த வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.