FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.
FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in. இந்திய உணவு கழகத்தில் 4103 வேலைவாய்ப்புகள் இந்திய உணவுக் கழக நிறுவனத்தில் 4 ஆயிரத்து 103 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய உணவு கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. (FCI) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டல கிளைகளிலும் ஜூனியர் என்ஜினீயர், டைப்பிஸ்ட், அசிஸ்டன்ட் (கிரேடு2, கிரேடு-3) மற்றும் ஸ்டெனோ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக தெற்கு மண்டலத்தில் 540 பணியிடங்களும், வடக்கு மண்டலத்தில் 1999 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 538 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 735 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 291 பணியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்… வயது வரம்பு ஸ்டெனோ பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் அசிஸ்டன்ட் கிரேடு-2 பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் கிரேடு 3 பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். கல்வித்தகுதி ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயாிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட அளவில் சுருக்கெழுத்து தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோ (கிரேடு 2) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தி தட்டச்சுத் திறன் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும், இதர பட்டப்படிப்புகள் மற்றும் பி.இ., பி.டெக் படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் கிரேடு 3 பணியில் வாய்ப்புகள் உள்ளன. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.fci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். Click Here to Download