தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப மனுக்களை www.tnusrbonline.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 28-9-2018 ஆகும். விண்ணப்ப மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள இதர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் செயல்படும். உதவி மையத்தை 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 9789035725 போன்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களில் பேசலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.

Click Here to Download