எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2 ஆயிரம் நர்சிங் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது போபால், ஜோத்பூர், பாட்னா மற்றும் ராய்ப்பூரில் செயல்படும் எய்ம்ஸ் கிளைகளில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கிளை வாரியாக உள்ள பணியிட விவரம் : போபாலில் 600 இடங்களும், ஜோத்பூரில் 600 இடங்களும், பாட்னாவில் 500 இடங்களும், ராய்ப்பூரில் 300 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்… வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 29-10-2018-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு, ஜெனரல் நர்சிங், நர்சிங் மிட்வைபரி டிப்ளமோ படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த ேவண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-10-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsexams.org என்ற இணையதளம் பக்கத்தைப் பார்க்கலாம்.