TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) – II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS)  கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  Tamil Nadu Public Service Commission தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 – [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its Notification dated 12.10.2015 and Supplement Notification dated 20.10.2015 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts) 2014 – 2015 and 2015-2016. The Written Examination was held on 24.01.2016 and the details of written examination marks and rank has been hosted in the Commission’s website on 08.06.16. The II Phase of Certificate verification is scheduled to be held from 01.03.2017 to 10.03.2017 at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for II Phase of Certificate Verification (as per Rank order) has been hosted in the Commission’s Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the II Phase of Certificate Verification. The same may also be downloaded from the Commission’s website (www.tnpsc.gov.in). The candidates have also been informed by means of SMS and E-mail. 3. Candidates are admitted to the II Phase of Certificate Verification based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. If their claims are found to be false or incorrect, they will not be considered for further course of selection process. Mere admission to the Certificate verification does not confer on them any right for selection. 4. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 5. Candidates who do not appear for II Phase of Certificate Verification on the date and time allotted to them will not be given any further chance to appear for the same. Date: 09.02.2017 Secretary இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.