* EMIS  online ல் பதிவேற்றும் பணி அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது.
* அதற்கு முன்னர் செய்ய வேண்டிய முக்கிய விபரங்கள்
* முதலில் உங்கள் பள்ளியின் பெயரில் இமெயில் (EMAIL ID) Open பண்ண வேண்டும்
அதற்கு தலைமை ஆசிரியர் செல் நம்பரை கொடுக்க வேண்டும்.
* 2017 – 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட படிவத்தை Onlie ல் download செய்து Printout எடுத்து முதல் வகுப்பில் இந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுடைய விபரங்களை நிரப்ப வேண்டும்.
* மாணவரின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியாக எழுத வேண்டும்
* மாணவரின் பெற்றோரின் செல் நம்பர் கண்டிப்பாக எழுத வேண்டும்
* மாணவரின் வீட்டு முகவரி கதவு எண் /ஊரின் பெயர்/அஞ்சலகத்தின் பெயர் /தாலுகாவின் பெயர் /மாவட்டத்தின் பெயர் /பின்கோடு நம்பர் முதலியவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும்
* உங்கள் பள்ளியின் SMC Bank A/C No /வங்கியின் பெயர் /எந்த ஊர் என்பதை கண்டிப்பாக எழுத வேண்டும்.
* உங்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA) நம்பரை எழுத வேண்டும்.உங்கள் பள்ளிக்கு ஏற்கனவே வந்த புத்தகத்தின் கவரில் PTA எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
* உங்கள் பள்ளியிலிருந்து இந்த ஆண்டு (2017-2018) TC வாங்கி வேறு பள்ளிக்குச்சென்றவர்கள் விபரத்தை எழுத வேண்டும்.